தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சந்திப்பு
புதன், 29 ஜனவரி, 2014
தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்
அவர்களை, திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28.01.2014)
மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தி.வேல்முருகன் அவர்களின் இல்லத்தில்
சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு வருமாறு தி.வேல்முருகனை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைத்துள்ளார். இதற்கு தி.வேல்முருகன் அவர்கள் கட்சியின் நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து முடிவை 23.02.2013 அன்று சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாட்டில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் வடமாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினால் ஏற்படும் சரிவை தற்போது வடமாவட்டங்களில் வேகமாக வளர்ந்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூலம் ஈடுகட்டலாம் என்று திராவிட முன்னேற்ற கழகம் கருதுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக