இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யக் கோரி தி.வேல்முருகன் தலைமையில் சென்னை சுங்கத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்
வெள்ளி, 3 ஜனவரி, 2014
இலங்கை
சிறையில் வாடும் 210 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை
எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக
மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், இலங்கை கடற்படையால் பறிமுதல்
செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரியும்,
கச்சத்தீவை மீட்க கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று
03.01.2014 (வெள்ளிக்கிழமை) சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நடந்தது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், இணைப் பொது செயலாளர் போரூர் சண்முகம், தொழிற்சங்கத் தலைவர் சைதை சிவா, கொற்றவமூர்த்தி, செந்தில்குமார், வில்லிவாக்கம் தேவ்ராஜ், மாணவர் பாசறை தலைவர் ரவிப்ரகாஷ், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் உள்ள மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உட்பட கட்சி நிர்வாகிகளை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக