தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
புதன், 21 ஆகஸ்ட், 2013
தானே
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்
கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழக அரசு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயல் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதியை வழங்கி உதவுமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ரூபாய் ஓரு லட்சம் வழங்கிய நிதியை ரூபாய் ஓரு லட்சத்து இருபதாயிரம் ஆகவும், முதலமைச்சரின் சூரியசக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூபாய் ஓரு லட்சத்து என்பதாயிரமாக இருந்ததை ரூபாய் முப்பதாயிரம் உயர்த்தி ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரமாக வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு, தானே புயல் வீடு கட்டும் திட்டத்திற்கு ஓதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. வீடு கட்டுபவரே தனது உடல் உழைப்பை கொடுத்தும், கட்டுமான பொருள்களின் விலை உயர்வினால் வீடு கட்ட இந்த நிதி போதாது. எனவே தமிழக அரசு கூடுதலாக ரூபாய் ஐம்பதாயிரம் ஓதுக்கி ரூபாய் ஓரு லட்சத்து ஐம்பதாயிரம்மாக வழங்க வேண்டுமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
என்.எல்.சிக்கு வீடு நிலம் கொடுத்து தானே புயலில் பாதிக்கப்பட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு என்.எல்.சி நிறுவனம் எந்த நிதி உதவியும் இது வரை வழங்கவில்லை. எனவே தானே புயல் வீடு கட்டும் பயனாளிகளுக்கு என்.எல்.சி நிறுவனம் கூடுதலாக ரூபாய் ஓரு லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
லேபிள்கள்:
கடலூர் மாவட்டம்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
தானே புயல்,
தி.வேல்முருகன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக