திருச்சியில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி .வேல்முருகன் கைது
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
ஈழத்
தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம் அணு உலை
விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழக வந்த பிரதமர்
மன்மோகன்சிங்குக்கு எதிராக திருச்சியில் கருப்புக் கொடி போராட்டம் நடத்திய
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி
நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு
எதிர்ப்பு தெரிவிக்காத இந்திய அரசை கண்டித்தும், மீனவர்கள் மீதான சிங்கள
கடற்படையினரின் தாக்குதலை கண்டித்தும், திருச்சியை அடுத்த திருமயத்தில்
பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் துவக்கி வைக்க இன்று 02/08/2013 காலை
10 மணிக்கு திருச்சி வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி
காட்ட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமைக்
கட்சி நிறுவனத்தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக்
கட்சி மாநில பொதுச் செயலாளரும் முன்னாள்
எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி
அமைப்பு செயலாளர் காமராஜ், ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி, துணை பொதுச்
செயலாளர் மல்லை சத்யா, சிப்பிபாறை ரவிச்சந்திரன், தமிழ் தேச பொதுவுடையை
கட்சித் தலைவர் மணியரசன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்
பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான
நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக