தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம்: தி. வேல்முருகன் சிறப்புரையாற்றினார்
புதன், 28 ஆகஸ்ட், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சையில் 26/08/2013 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் காவேரி தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆர்.பி.தமிழ்நேசன் தொடக்க உரை ஆற்றினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முத்துமாரியப்பன் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில இணைப்பொது செயலாளர் சண்முகம், அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணை பொது செயலாளர்கள் கனல்கண்ணன், சரவணன், மாநில பொது செயலாளர் சாமிநாதன், துணைப்பொதுச்செயலாளர் சரவணதேவா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முகமதுஆரிப் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். செல்வம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வந்தும் இன்று வரை விவசாயிகள் பயிரிட முடியவில்லை. எனவே பயிர்க்கடன், உரக்கடன், விதைநெல் போன்ற இடுபொருட்களை உடனே வழங்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
2. தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் உள்ள கழவறைகள் சுகாதாரக்கேடுகளுடன் உள்ளன. எனவே சரிவர பராமரிக்காத கழிவறைகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் நகராட்சியே நடத்த வேண்டும்.
3. தஞ்சையில் இருந்து சென்னைக்கு, சென்னையில் இருந்தும் தஞ்சைக்கு விரைவு ரெயில் உடனே அறிவிக்க வேண்டும். தஞ்சையில் இருந்த முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும்.
4. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் காய்கறி வணிக சந்தை அமைக்க வேண்டும்.
5. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், ஒன்றியம் வாரியாக கிளை கூட்டங்கள் நடத்தி கொடியேற்று விழா நடத்துவது
என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.