திருப்பதி அருகே வன அதிகாரி கொலையில் அப்பாவி தமிழர்களைக் கைது செய்வதை கைவிட வேண்டும் என ஆந்திர காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
புதன், 18 டிசம்பர், 2013
திருப்பதி
அருகே வன அதிகாரி கொலையில் அப்பாவி தமிழர்களைக் கைது செய்வதை கைவிட
வேண்டும் என ஆந்திர காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்
தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் செவ்வாய்க்கிழமை (17.12.2013) வெளியிட்ட அறிக்கை:
திருப்பதி அருகே செம்மரக் கடத்தலை தடுக்கச் சென்ற வனத்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கடத்தல்காரர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமானவர்களை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் தவிர, அன்றைய தினம் திருப்பதி கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர்கள், ரயில் நிலையத்தில் நின்றவர்கள் என 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்வதாக தகவல்கள் வந்துள்ளன.
உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதில் ஆட்சேபனை கிடையாது. ஆனால் அப்பாவி தமிழர்களை சித்ரவதை செய்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக