தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிக்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்
புதன், 13 நவம்பர், 2013
இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக
தஞ்சாவூர், விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8ம்
தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து
3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.
இந்நிலையில், இன்று (13.11.2013) புதன்கிழமை காலை முள்ளிவாய்க்கால்
முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை காவல்துறையினர் துணையுடன்
இடிக்கப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட உலகத்
தமிழர் பேரமைப்புத்
தலைவர் பழ. நெடுமாறன் அவர்களை காவல்துறையினர் கைது செய்ததை தமிழக
வாழ்வுரிமைக் கட்சி பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக
வாழ்வுரிமைக் கட்சி பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக