தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
தேசியத் தலைவர் மேதகு வே.கரிகாலன் (எ)
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு
26.11.2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் "கட்டிகை" வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி
தி.வேல்முருகன் அவர்கள் "கட்டிகை" வெட்டினார். விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி
தி.வேல்முருகன் அவரகளுக்கு தேசிய தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க தலைவர் சைதை சிவா, மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்திரியன் து.வேணுகோபால் உட்பட பலர்
பங்கேற்றனர்.
லேபிள்கள்:
பண்ருட்டி தி.வேல்முருகன்,
வே.கரிகாலன்,
வேலுப்பிள்ளை பிரபாகரன்
அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு சார்பில் ஐயா பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் - தி.வேல்முருகன் பங்கேற்ப்பு
சனி, 23 நவம்பர், 2013
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்
கூடாதென வலியுறுத்தி, இந்திய அரசு அலுவலகங்களைத் தாக்கிய திராவிடர்
விடுதலைக் கழக சென்னை - சேலம் தோழர்கள் 7 பேர் மீதும், அதன் தலைவர் தோழர்
கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் மீதும் தமிழக அரசால் ஏவப்பட்டுள்ள தேசியப்
பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிவாய்க்கால்
முற்றம் எழுப்பிய ஐயா பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக்
கைவிடக் கோரியும், சென்னையில் இன்று (23.11.2013) காலை, 'அடக்குமுறைச்
சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு' சார்பில், பல்வேறு கட்சி - இயக்கங்கள் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 11 மணிளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் திரு. தெகலான் பாகவி, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் குடியரசு முன்னணி செயலாளா வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை செயலக உறுப்பினர் தோழர் சதீஷ், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பரிமளா உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்,
பண்ருட்டி தி.வேல்முருகன்,
பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன்கோரிக்கை
வெள்ளி, 15 நவம்பர், 2013
உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின்
நிறுவனருமான அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை
செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.
வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.
வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலையை தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு
தமிழனும், உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சில்
நிறுத்தி ஆறாத வடுவாகவும் அணைக்க முடியாத பெரும் நெருப்பாகவும் இருக்க
வேண்டும் என்ற உணர்வோடு தமிழ் நாட்டின் தஞ்சையில் கட்டி எழுப்பப்பட்ட
முள்ளி வாய்க்கால் முற்றம் அரசு நிலத்தில் அதன் காம்பவுன்டு சுவரும்,
சுற்று சுவரும் பூங்காவும் அமைக்கப்பட்டது என்று கூறி கைது
செய்யப்பட்டிருக்கும் அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களின் வயதையும்
உடல்நிலையையும் கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்
வர வேண்டும். மேலும் அந்த வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்தும்
அவர்கள் மீது உள்ள வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.
தமிழ் ஈழ மண்ணில் சிங்கள பேரினவாத அரசு ராஜபக்சே அங்கு உள்ள ஈழதமிழர்களுடைய, மாவீரர்களுடைய சிலைகள், நினைவுசின்னங்கள், தமிழ் தலைவர்களுடைய சிலைகள் அனைத்தையும் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். இந்த சூழலில் அந்த மண்ணில் நினைவுசின்னம் இல்லாத போது நம்முடைய தாய்தேசமான தமிழ் நாட்டில் இனஅழிப்பு போரின்போது ஏற்பட்ட பாதிப்புகளை வருங்கால தலைமுறை தெரிந்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட முற்றத்தை பாதுகாக்க முன் வரவேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும் ஈழதமிழர்களுடைய நலனுக்காக மூன்று சட்ட மன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர்களுடைய நடவடிக்கை பாராட்டுதல்குரியதாகும். அதே வகையில் இந்த முள்ளி வாய்க்கால் முற்றத்தினை கூட நம்முடைய தமிழக அரசும், மாண்புமிகு முதலமைச்சரும் முன் வந்து அமைத்திருந்தால் தமிழ் நாட்டில் வாழ்கின்ற தமிழர்களிடத்திலும், உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களிடத்திலும் நெஞ்சில் நீங்காத ஒரு பெயரையும் புகழையும் மாண்புமிகு புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் வரிசையில் தற்போதைய முதல்வர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் தமிழக அரசு அதை செய்ய முன் வராத போது அதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதும் கைது செய்திருப்பதும் உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.
ஆதலால் தமிழக அரசு திருச்சி சிறையில் வாடுகின்ற அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டு சேலம் சிறையில் வாடும் திரு.கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர் அனைவரையும் விடுதலைசெய்து அவர்கள் மீது உள்ள வழக்கையும் ரத்து செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அது மேலும் சிறப்படைகின்ற வகையில் தமிழக அரசு செய்து தர முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அறிக்கைகள்,
பழ.நெடுமாறன்,
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிக்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்
புதன், 13 நவம்பர், 2013
இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக
தஞ்சாவூர், விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8ம்
தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து
3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.
இந்நிலையில், இன்று (13.11.2013) புதன்கிழமை காலை முள்ளிவாய்க்கால்
முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை காவல்துறையினர் துணையுடன்
இடிக்கப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட உலகத்
தமிழர் பேரமைப்புத்
தலைவர் பழ. நெடுமாறன் அவர்களை காவல்துறையினர் கைது செய்ததை தமிழக
வாழ்வுரிமைக் கட்சி பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக
வாழ்வுரிமைக் கட்சி பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
லேபிள்கள்:
அறிக்கைகள்,
தஞ்சாவூர்,
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம்
செவ்வாய், 12 நவம்பர், 2013
காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று
செவ்வாய்கிழமை (12.11.2013) வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் சத்ரியன், து.வெ.வேணுகோபால், ஏழுமலை, தொழிற்சங்க தலைவர் கே.வி.சிவராமன் முன்னிலை வகித்தனர். ஒப்பாரி போராட்டத்தை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார்
சிங்கள ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட இசைப் பிரியாவின் உருவ பொம்மையை மகளிரணி தலைவி வெள்ளையம்மாள் தலைமையில் 1000 பெண்கள் கொண்டு வந்து ஒப்பாரி வைத்து அழுதனர். சிங்கள ராணுவத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் வசைபாடினர்.
ஒப்பாரி போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தொடங்கி வைத்து பேசியது:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரெயில் மறியல் நடத்தி 12 ஆயிரம்பேர் கைதாகி உள்ளனர். சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகையிட எங்களை அனுமதிக்கமாட்டார்கள். நீங்கள் கைக்குழந்தையுடன், வயதான முதியவர்களுடன் போராட்டத்துக்கு வந்துள்ளதால் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வள்ளுவர் கோட்டம் அருகே ஒப்பாரி போராட்டத்துக்கு அழைத்து வந்துள்ளோம். இசைப்பிரியாவின் படுகொலை, பாலச்சந்திரனின் இரக்கமற்ற சாவு கல்நெஞ்சையும் கறைய வைக்கும். இதற்கு ராஜபக்சேவை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தியும், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தியும் இந்த ஒப்பாரி போராட்டம் நடக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜோசுவா, தேவராஜ், ஆறுமுகம், சந்துரு, வீரன், வீர ராகவன், மோகன் வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

ஒப்பாரி போராட்டம்,
தி.வேல்முருகன்,
மகளிர் பாசறை
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 12/11/2013 அன்று ரயில் மறியல் போராட்டம் - தி.வேல்முருகன் அறிவிப்பு
திங்கள், 11 நவம்பர், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை (10/11/2013) வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத்தில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்கவும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவும் ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.
தற்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வற்புறுத்தியும் அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளது.
இசைப்பிரியாவுக்கு இழைத்த போர் குற்றங்களை தொலைக்காட்சியில் பார்த்த தமிழக மக்களும், மாணவர்களும் தற்போது கொந்தளிப்பாக உள்ள சூழலில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
எனவே மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை (12/11/2013) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் பெண்கள் திரண்டு ஒப்பாரி போராட்டம் நடத்துவார்கள்.
அதே போல் தமிழ் அமைப்புகள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்துக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறி உள்ளார்.
லேபிள்கள்:
அறிக்கைகள்,
ஒப்பாரி போராட்டம்,
ரயில் மறியல் போராட்டம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)