கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் : தி.வேல்முருகன் சிறப்புரையாற்றினார்
புதன், 21 செப்டம்பர், 2011
சேத்தியாத்தோப்பு :
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் சேத்தியாத்தோப்பு நடராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ஆடியபாதம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி, மாநில துணை பொதுச்செயலர் சண்முகம், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சின்னதுரை வரவேற்றார். மாநில இணை பொதுச் செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன், விவசாய அணிச் செயலர் சேரலாதன், ராஜா சாமிநாதன், வேல்முருகன் உட்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- உள்ளாட்சியில் அனைத்து பதவிகளுக்கும் பா.ம.க., வேட்பாளர்களை நிறுத்துவது.
- கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
- சேத்தியாத்தோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும்.
- மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்
என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலர்கள் இளையராஜா, சரவணன், ஒன்றிய விவசாய அணி செயலர் ராதாகிருஷ்ணன் பரமசிவம், பஞ்சநாதன், வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புவனகிரி ஒன்றிய செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக