பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்களின் எழுச்சியே காரணம், தி.வேல்முருகன் என கூறி உள்ளார்.
இது குறித்து தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
அன்பார்ந்த தாயக மற்றும் புலம் பெயர் உறவுகளே பேறிவாளன், முருகன், சாந்தன், ஆகிய மூவர் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, 1993ல் கேரளாவில் ஒரு கொலையை தற்கொலையாக சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரியினால் கொடுமையான சித்திரவதைகலின் மூலம் பெறப்பட்ட வாக்கு மூலத்தினை அடிப்படையாக கொண்டு, அடிப்படை உரிமையான மேல் முறையீட்டு உறிமை கூட மறுக்கப்பட்டு 21 ஆண்டுகாலம் சிறை கொட்டடியின் சித்ரவதைகளை அனுபவித்த பின்னரும், அவர்களுக்கு தூக்கு என்பது , சிறிதும் ஏற்க முடியாத மனித நேயத்திற்கும், தனிமனித உரிமைகலுக்கும் எதிரான தீர்ப்பாகும்.
இம்மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் முடிவினை நோக்கி தமிழக அரசினை நகர்த்துவது நம்முடைய வலிமையான எழுச்சி மிகு போராட்டத்தினால்தான் முடியும் ஆகவே அரசியல் இயக்கங்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொது மக்கள், ஆகிய தாய் தமிழக உறவுகள் அனைவரும், நம்முடைய உறவுகளின் உயிரினை, காக்கும் பொருட்டும், தமிழினத்தின் போர் குனத்தை உலகுக்கு உணர்த்திடவும் போராட்ட களத்தில் ஒன்றினைவோம் ........................
தமிழின உணர்வோடு தி.வேல்முருகன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக