மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன்: நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகன்
திங்கள், 16 மே, 2011
தேர்தலில் எங்களுக்கு ஓய்வு கொடுத்து மக்கள் எடுத்துள்ள முடிவை ஏற்பதாக நெய்வேலி தொகுதியில் குறைந்த ஓட்டில் வெற்றி வாய்ப்பை இழந்த பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
நெய்வேலி நகர திமுக செயலர் புகழேந்தி வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது தொட்ர்பாக, அவரை சந்தித்து ஆறுதல் கூறவந்த வேல்முருகன், அங்கு கூடியிருந்த திமுக மற்றும் பாமகவினரிடையே பேசுகையில்,
"நீங்கள் எனக்கு ஆறுதல் கூறுவீர்கள் என நான் எதிர்பார்க்கும் வேளையில் நீங்களே சோகமாக இருப்பது எனக்கு கவலையளிக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தேர்தலில் எனக்காக திமுக, தொமுசவினர் நன்கு பணியாற்றியிருப்பது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. எதைப்பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். எப்போதும்போல் எனது மக்கள் பணி தொடரும். உங்களில் யாருக்காவது, வேறு கட்சியினரால் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அதை உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள். அடுத்த நிமிடம் உங்கள் பாதுகாப்புக்கு நான் வருவேன். உடல் நிலை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி 6 மாதம் ஓய்வெடுக்கவுள்ளேன். எனவே கட்சிப் பிரமுகர்கள், கூட்டணிக் கட்சிப் பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. உடல்நிலை சீரானவுடன் நான் மீண்டும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வேன்' என்றார்.
நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக