காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் 28.10.2013 அன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 26 அக்டோபர், 2013

 

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள்: 28.10.2013 திங்கட்கிழமை
நேரம்: காலை 10.00மணி அளவில்
இடம்: பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு அலுவகம் எதிரில்,
              மஞ்சக்குப்பம்,
              கடலூர்.
 

Read more...

தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு

திங்கள், 21 அக்டோபர், 2013

தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவிற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இது குறித்து மிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழீழ மண்ணில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய இனப்படுகொலையினை நாளைய தலைமுறையும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் நெஞ்சில் நிறுத்தும் கற்சிற்பமாக தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றம் காணப்படுகின்றது.

மாவீரர்களையும் மக்களையும் நினைவிற்கொள்ளும் வகையிலும் இனப்படுகொலையினை நினைவில் நிறுத்தி செல்லவும் தடைசெய்யப்பட்ட குண்டுகளை சிங்கள அரசு பயன்படுத்தியது என்பதை தமிழர்கள் மறந்துவிட முடியாதவாறு முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அமைகின்றது. நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Read more...

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணி அமைக்காது: பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவிப்பு

தஞ்சை ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் நேற்று (20.10.2013) அளித்த பேட்டி: 
 
பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு புதிய ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் அணைக்கரை பாலம் தொடர்ந்து பழுது அடைந்து வருவதால் அங்கு புதிய பாலம் கட்டி பொதுமக்கள் மற்றும் பஸ், கனரக வாகனங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் காவிரி பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் துயர் துடைக்கும் வகையில் பயிர்க்கடன், பயிர் தெளிப்பான், உரக்கடன் போன்றவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கும் வகையில் பிரசாரம் செய்வோம். அதே போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் எங்கள் கட்சி கூட்டணி அமைக்காது. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்றும் சாதி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம் என்றும் கூறும் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்து தக்க பாடம் புகட்ட வேண்டும்.

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி கலந்து பேசி முடிவு செய்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தமிழ்நேசன், மாவட்ட தலைவர் கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட செயலாளர் வேலுமுத்து மாரியப்பன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பாபு, நகர செயலாளர் முகமதுஎகியா, தஞ்சை ஒன்றிய செயலாளர் தீனா, திருவையாறு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், நகர இளைஞரணி செயலாளர் முகமது கதிர்அலி, துணைத் தலைவர் முத்துதமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (15.10.2013) குறித்து வார இதழ்களில் வந்துள்ள செய்திகள்

சனி, 19 அக்டோபர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2013 அன்று  மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டம் குறித்து வார இதழ்களில் வந்துள்ள செய்திகள்

ஜூனியர் விகடன்


 குமுதம் ரிப்போர்ட்டர் 

  
நக்கீரன்


 

Read more...

மாலை முரசு நிர்வாக ஆசிரியர் சி.பா.ராமச்சந்திர ஆதித்தனார் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஆழ்ந்த இரங்கல்

வியாழன், 17 அக்டோபர், 2013

மாலை முரசு நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் உடல் நலமின்மை காரணமாக நேற்று 16.10.2013 மரணம் அடைந்தார். அவரது மறைவால்வாடும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 16 அக்டோபர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (15.10.2013) மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வை.காவேரி, எம்.எஸ்.சண்முகம், ப.காமராஜ் மாநில தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சத்திரியன் து.வெ.வேணுகோபால், செந்தில்குமார், துணைத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் ஆர்.பி.தமிழ் நேசன், சத்திரியன் து.வெ.வேணு கோபால், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜேசுவா, தென் சென்னை மாவட்ட செயலாளர் தேவராஜ், வட சென்னை ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் அப்துல், பகுதி செயலாளர் வீரராகவன் மாவட்ட மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட தமிழ் நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தலைவர் தி.வேல்முருகன் பேசியது:–

சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் நிலையாக உள்ளது. எனவே மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த மாநாட்டி பங்கேற்க கூடாது. தமிழ் ஈழ மண்ணில் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மற்றும் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்.

இலங்கை ராணுவத்தால், தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி மத்திய அரசு இலங்கைக்கு எந்தவித ராணுவ உதவிகள் மற்றும் போர்க் கப்பல்களை வழங்க கூடாது.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை வாழ்வுரிமை வழங்க வேண்டும். மத்திய அரசு இதில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வேல்முருகன் பேசினார்.

இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி வேல்முருகன். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை அண்மையில் யாருமே கூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஞ்சி மக்கள் மன்றம் கலைக் குழு சார்பில் தமிழீழ விடுதலை குறித்த எழுச்சிப் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. பறை இசை முழங்க, இளைஞர் பட்டாளம் வீறு கொண்டு எழுந்ததை அங்கு காண முடிந்தது. சாரை சாரையாக மக்கள் கடலூர், பண்ருட்டி பகுதியில் இருந்து ஊர்திகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். கூட்டம் நடைபெறுகையில் மேலும் பல கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வண்ணமே இருந்தனர். எங்கு திரும்பினும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. இளைஞர்கள் பல்லாயிரம் பேர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். பண்ருட்டி வேல்முருகன் இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால், மற்ற கட்சிகளும் தங்கள் பலத்தை காட்டி இது போன்ற மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தால் ஆட்சியாளர்கள் அடிபணிவார்கள் என்பதில் ஐயமில்லை.

கோரிக்கைகள் வருமாறு:


*சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தியும்

* செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டியும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும்

*இலங்கை ராணுவத்தால் தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்திட கோரியும். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்

*இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது எனவும், போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது எனவும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்ககூடாது என வலியுறுத்தியும்

* இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்துவது

Read more...

மத்திய அரசை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு

திங்கள், 14 அக்டோபர், 2013

 
 


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்ட ராஜபக்சேவை கண்டித்தும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், இதில் உரிய கவனம் செலுத்தாத மத்திய அரசை கண்டித்தும் சேப்பாக்கத்தில் இன்று (15/10/2013) மாலை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ாஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, 14 நாட்களாக சென்னையில் உண்ணா விரதம் இருக்கும் தியாகி தியாகுவின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், செங்கல் பட்டு–பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்துவது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கூடாது, இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ் ஆர்வலர்கள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறி உள்ளார்.

இன்று 15/10/2013 நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் வேல்முருகன் தலைமை தாங்குகிறார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காவேரி, சண்முகம், காமராஜ், துணை பொதுச் செயலாளர் சத்ரியன், து.வெ.வேணுகோபால், தொழிற்சங்க தலைவர் கே.வி.சிவராமன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

Read more...

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கக் கோரி அக்டோபர் 15ல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

வெள்ளி, 11 அக்டோபர், 2013




தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடலூரில்  இன்று (11.10.2013) அளித்த பேட்டி:

காமன்வெல்த் கூட்டமைப்பு உருவான போது ஆண், பெண் ரீதியாகவும், இனம், மொழி, மத ரீதியாகவும் சொந்த நாட்டு மக்களை வேறுபடுத்தி பார்க்கும் நாட்டை அந்த கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இலங்கையை ஆளும் சிங்கள அரசு லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்துள்ளது. விதிகளுக்கு முரணாக மத இன ரீதியாக வேறுபடுத்தி சித்தரவதை செய்து கொலை செய்தது. எனவே இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறி மத வழிபாட்டு தலங்கள், கட்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது குண்டு வீசி தாக்கியுள்ளது. இதுபோன்ற மீறல்களுக்காக தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற பல நாடுகள் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. எனவே அதிக அளவில் மனித உரிமைகளை மீறிய இலங்கையை காமன் வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும்.

இதனை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 15–ந்தேதி மாலை 3 மணி அளவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழின உணர்வாளர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.

பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் தாண்டவராயன், பஞ்சமூர்த்தி, ஆனந்த், அருள்பாபு, பிரசன்னா உள்பட பலர் உடனிருந்தனர்.

Read more...

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்: பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை

திங்கள், 7 அக்டோபர், 2013

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோவையில் நேற்று (06.10.2013) அளித்த பேட்டி:

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. அனைத்து மக்களும் இனம், மதம், மொழி, நிறம், அரசியல், நீதி, நிர்வாகம் அனைத்திலும் சுதந்திரமாக இருந்தால்தான் அந்த நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடியும். ஆனால் இதில் ஒன்றைக்கூட இலங்கை பின்பற்றவில்லை.

சிறுபான்மையாக உள்ள தமிழரை இலங்கை அரசு கொன்று குவித்துள்ளது. எனவே இலங்கைக்கு காமன்வெலத் மாநாட்டை நடத்த உரிமை இல்லை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறாமல் இந்தியா தடுக்க வேண்டும். அப்படியே அங்கு காமன்வெல்த் மாநாடு நடந்தாலும் இந்தியா அதில் பங்கேற்க கூடாது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் தமிழர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம். 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என எச்சரிக்கை விடுக்கிறேன் என கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை பொதுச்செயலாளர் தமிழ்நேசன் உடன் இருந்தார்.


Read more...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி கோவையில் பொதுக்கூட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் சிறப்புரையாற்றினார்


இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 6.10.2013 மாலை 6.00 மணிக்கு கோவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், செயற்குழு உறுப்பினர் தோழர் வெ.ஆறுச்சாமி உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
 









Read more...

தியாகு அவர்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் உண்ணாவிரதம்

சனி, 5 அக்டோபர், 2013


இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்கவேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும். சிங்கள அரசுக்கு இந்தியா போர்கப்பல்களை வழங்கக்கூடாது. இந்தியாவிலிருந்து கடல் அடி கம்பி வழியே இலங்கைக்கு மின்சாரம் வழங்கக் கூடாது. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதார தடை விதிக்கவேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்ற அனுமதியுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. தியாகு 01.10.2013 (செவ்வாய்கிழமை) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
 
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர் தியாகுவுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் மற்றும் கட்சித் தொண்டர்கள் 04.10.2013 வெள்ளிக்கிழமை நேரடியாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளித்தனர்.
 


 


Read more...

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு அவர்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக தி.வேல்முருகன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்கவேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும். சிங்கள அரசுக்கு இந்தியா போர்கப்பல்களை வழங்கக்கூடாது. இந்தியாவிலிருந்து கடல் அடி கம்பி வழியே இலங்கைக்கு மின்சாரம் வழங்கக் கூடாது. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதார தடை விதிக்கவேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்ற அனுமதியுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. தியாகு 01.10.2013 (செவ்வாய்கிழமை) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. தியாகு அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இன்று ஒரு நாள் (04.10.2013) அவருடன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்

Read more...

அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் கடலூரில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன், 3 அக்டோபர், 2013

பேரழிவை உண்டாக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு! எனக் கோரி அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில்  2.10.2013 (புதன்கிழமை)  கடலூரில் கடலூர் மஞ்சக்குப்பம் திடல் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அணுசக்திக்கு எதிராக பல்வேறு கட்சிகள்- அமைப்புகளின் நிர்வாகிகள், தோழர்கள் என ஆண்களும் பெண்களுமாக அணி அணியாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  காலை 10.30 மணிக்கு அணு உலைக்கு எதிரான முழக்கங்களுடன் துவங்கிய  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்  பேசியது:

 தென் தமிழக மக்களுக்கும், மீனவ மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற பல லட்சம் மக்கள் மீது ஆயிரக்கணக்கில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் படி இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அணு உலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார் .

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர்.கிவெங்கட்ராமன், ம.தி.முக மாவட்டச் செயலாளர் திரு.என்.இராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் திரு.உ.கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு.தி.ச.திருமார்பன், மாவட்டச் செயலாளர், திரு.பா.தாமரைச்செல்வன், நாம் தமிழர் கட்சி மாவட்ட அமைப்பாளர் வா.கடல்தீபன், மீனவர் ஐக்கிய முன்னணி திரு.இரா.மங்கையர் செல்வன். மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர், திரு.ஷேக்தாவுத், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் திரு, கு.அழகிரி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா பொதுச் செயலாளர் திரு.ச. மக்பூல் அகமது, தமிழ் நாடு நுகர்வோர் கூட்டமைப்பு திரு.மு. நிஜாமுதின், கடலூர் சிப்காட் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு தோழர், அருள் செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, திரு.இரா.பாபு, தமிழ்த் தேச மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர், தயாநிதி, சிங்கார வேலர் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர் திரு.தினகரன், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டச் செயலாளர் திரு.வை.இரா.பாலசுப்பிரமணியம், தனியார் பேருந்து தொழிலாளர்கள் சங்கம், திரு பண்டரிநாதன், தமிழர் கழகம் பெ.பாவாணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.




Read more...

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் முழக்கப் போராட்டம்

செவ்வாய், 1 அக்டோபர், 2013


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம்

தேதி: 02-10-2013
நாள்: புதன்கிழமை,
நேரம்: மாலை 4-00மணி,
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,விழுப்புரம்

தலைமை:  
தி.வேல்முருகன், நிறுவனர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

முன்னிலை:

ஏ.கே.மணி, ம.திமுக
எம்.ஆர்.குமரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மு.யா.முஸ்தாக்தீன், மமக
செ.தேசிங்கு, நாம் தமிழர் கட்சி

கண்டன உரை:

இராம.இரவிஅலெக்ஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
வா.ச.சுரேஷ் குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பாபு கோவிந்தராஜ், மதிமுக
பிரபா.கல்விமணி, மகஇ
க.நடராசன், மதிமுக
எம்.முஜிபுர்ரஹ்மான், மமக

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP