இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

இனப்படுகொலை நடந்த இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 29/09/2013 அன்று விருத்தாசலத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

விருத்தாசலம் வானொலித் திடலில்  நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் கடலூர் (மேற்கு) மாவட்டச் செயலர் வ.சின்னதுரை தலைமை வகித்தார். விருத்தாசலம் நகரச் செயலர் பி.ஜி.சேகர் வரவேற்றார். தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கண்டன உரை நிகழ்த்தினார்.

தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் பொதுச் செயலர் வை.காவேரி, மாநில இணை பொதுச் செயலர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலர் மே.ப.காமராஜ், மாநில பொது செயலாளர் காவேரி, மாநில துணைப் பொது செயலாளர் கருப்பு சரவணன், புதுவை மாநில அமைப்பாளார் ஸ்ரீதர், சின்னதுரை, மாநில இளைஞசரணித் தலைவர் ரவி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். 

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்தும், 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்று குவித்த ராஜபட்சே தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் அறிவழகன், முருகன், இராசன், விருத்தாசலம் ஒன்றியச் செயலர்கள் தியாகராசன், பன்னீர்செல்வன், செல்வம், தங்கவேல், ரெங்கசுரேந்தர், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

















தியாகி தீபம் தீலிபன் நினைவு வணக்க நிகழ்வு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தியாகி தீபம் தீலிபன் நினைவு வணக்க நிகழ்வும், போர்க்குற்றவாளி இராஜபக்சே நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது ஏன்? விளக்கப்பொதுக்கூட்டம் 26/09/2013 சென்னை லாயிஸ் சாலை, வி.எம்.தெரு சந்திப்பு, ராயப்பேட்டையில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். 
 











 

பா.ம.க. இடம் பெறும் அணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது - பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

செவ்வாய், 24 செப்டம்பர், 2013


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.பண்ருட்டி வேல்முருகன்  23/09/2013 அன்று சேலத்தில் அளித்த பேட்டி:

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கை தமிழர்களின் உரிமைகளை வழங்க வேண்டும். தமிழ் ஈழ உணர்வாளர்களை மதிக்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ அவரது பிரதிநிதியோ பங்கேற்க கூடாது. மீறி பங்கேற்றால் அக்டோபர் மாதம் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டம் மூலம் முதல்வர போர்க்கால நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

ஏற்காடு தொகுதியில் கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு எங்கள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால் அவருக்கு பதிலாக அதே கட்சியை சேர்ந்த ஒரு வரை எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாம். அல்லது அதற்கு அடுத்த ஓட்டு வாங்கியவரை எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் தனித்து போட்டியிடுவோம் என்றார். இதையாவது அவர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் ஒரு போதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொது செயலாளர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணை பொது செயலாளர்கள் எஸ்.கே. சக்திவேலன், ஜெயமோகன், சத்தியமூர்த்தி மற்றும் ஆறுமுகம், ஜெயலட்சுமி பாலு, அழகேசன், பாலு, கராத்தே வெங்கடேசன், சபரிஷ், ராகுல், ராஜ்குமார், ரகு, சரவணமூர்த்தி, முனிரத்தினம், மலர் ராமலிங்கம், சரவணன், கணேசன், ஏ.பி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் உபரிநீரை திருப்பி ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம்

திங்கள், 23 செப்டம்பர், 2013

மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் உபரிநீரை திருப்பி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம் ஆத்தூரில் 22/09/2013 அன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் வை.காவேரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத், அன்பரசன், முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலாளர் காமராஜ், மாநில துணைப் பொதுச் செயாலாளர் ஜெயமோகன், மாநில துணைப் பொதுச் செயாலாளர் கருப்பு சரவணன், மாநில துணை பொதுச் செயலாளர் சு.க.சக்திவேலன், மாநில மாணவர் பாசறை தலைவர் ரவிபிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மாவட்ட அமைப்பாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.  பொதுக்கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் கலந்து கொண்டு ஆற்றிய உரை:
 

 தமிழக வாழ்வுரிமை கட்சி எப்போதும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும். ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கும் காமன்வெல்த் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது. தமிழர்களின் நலனுக்காக செவி சாய்க்கும் அரசு விரைவில் மத்தியில் ஏற்படும். அப்போது தமிழர்களின் நலனிற்காக உழைக்கும் ஒருவர் பிரதமர் பதவிக்கு வரும்போது, மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் நீரை தடுத்து நிறுத்தி அணைகட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





மேஜர் கிண்ணி (ஒரு புலி வீரரின் போர் அனுபவம்) நூல் வெளியீட்டு விழா - பண்ருட்டி தி.வேல்முருகன் முதல் பிரதியை பெற்றார்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

மேஜர் கிண்ணி (ஒரு புலி வீரரின் போர் அனுபவம்) நூல் வெளியீட்டு விழா 21.09.2013 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், புதுவை பெரியார் திடலில் நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார்.









Pages (26)123456 Next

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP