தமிழ்க் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டித்து பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை

சனி, 29 டிசம்பர், 2012


பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சீர் அழிக்கும் செயலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்ற உள்ளார்.


இடம்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்.


நாள்: 31/12/2012, திங்கட்கிழமை.

நேரம் : காலை 9.00 மணி

ஜூனியர் விகடனில் தி.வேல்முருகன் அவர்களின் சிறப்பு பேட்டி

புதன், 26 டிசம்பர், 2012

ஜூனியர் விகடனில், செய்தியும் சிந்தனையும் நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 26-12-2012 முதல் 9-1-2013 வரை பேசுகிறார்.




தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :  044 - 66802919



கம்மாபுரம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா - பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்து கொண்டார்

திங்கள், 24 டிசம்பர், 2012

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்தில் 23/12/2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.  இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கம்மாபுரம், முதனை உள்ளிட்ட  இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியினை  ஏற்றி வைத்தார். 









இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த தி.வேல்முருகன் கோரிக்கை

திங்கள், 10 டிசம்பர், 2012




இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த வேண்டும் - தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

யாழில் தொடரும் அடக்குமுறை! ஐ.நா. படையை நிறுத்துக!

           இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதல்களும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளும் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாளை கடைபிடித்தார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டுக்காக மாணவர்களை வேட்டையாடி வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. வவுனியாவில் நேற்று கூட 2 மாணவர்களை நள்ளிரவில் கைது செய்து இருக்கிறது இதுவரை மொத்தம் 10 மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. மாணவர்களை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் 17 அப்பாவித் தமிழர்களை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்திருக்கிறது சிங்களப் பேரினவாத அரசு.

            கைது செய்யப்படுகிறவர்களின் கதி என்ன? அவர்கள் எந்த நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தபப்ட்டனர்? எந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விவரத்த்தைக் கூட இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருகிறது. தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொடுமையை கேட்டறிய வந்த ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரிடம் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை தமிழர் பிரதேசத்தில் ஐ.நா. படையை நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரோ இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்து வருகிறார்.

        இலங்கையில் மாணவர்கள் மீதும் அப்பாவித் தமிழர்கள் மீதும் சிங்களத்தின் தொடரும் கோரக்கொடுமையை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்! ஈழத் தமிழர்கள் கோருவது போல் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் சக்திகள் ஓரணியில் ஒன்று திரளவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உரிமையோடு அழைக்கிறது!

10 இளைஞர்கள் புலிகளாக மாறுகிறார்களோ அன்றுதான் தமிழ் ஈழ விடுதலை சாத்தியம் - பண்ருட்டி தி.வேல்முருகன்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

 விகடன் கட்டுரை

  மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதி, சேலத்திலும் புதுச்சேரியிலும் எழுச்சியை நடத்தி இருக்​கிறார்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினர்! தனி ஈழம் வேண்டி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட கரும் புலிகள், வான் புலிகள், கடற் புலிகள் மற்றும் மூத்த தளபதிகள் என 120 பேரின் அரிய புகைப்படங்கள், புதுச்சேரி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அரியாங்குப்பம் மில்லர் அரங்க வளாகத்தில், வைக்கப்பட்டு இருந்தன. வீர மரணம் அடைந்த புலிகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர், தியாக தீபத்தை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

 முதலில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்,
           ''உலகில் வாழும் தமிழர்களின் முகவரியான நம் தேசியத் தலைவரின் கனவையும் இலட்சியத்​தையும் சிங்களப் பேரின​வாத அரசு அழித்ததை, இளைய தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது. இது ஒரு சம்பிரதாய நிகழ்வோ, சடங்கோ அல்ல. 10 மைல் தொலைவில் நடந்த இனப் படுகொலையைத் தடுப்பதற்கு ஆறரைக் கோடி தமிழர்களும் தவறி விட்டோம்.  இன அழிப்புகளை, இனப் படுகொலைகளை, கற்பழிப்பு​களை, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வீடுகள், மீன்பிடி வலைகள் என்று அந்த மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்து வரும் சிங்களவாதிகளின் அட்டூழியங்களை இந்த நாட்களில் இளைய தலை​முறைக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். என்றைக்கு இந்த 10 கோடி தமிழர்​களில் இருந்து 10 இளைஞர்கள் புலிகளாக மாறுகிறார்களோ அன்றுதான் தமிழ் ஈழ விடுதலை சாத்தியம்'' என்று பொங்கினார்.

 
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி,

''தமிழர்களுக்கு மட்டுமே சொந்த நாடாக இருந்த இலங்கைத் தீவில் வந்தேறியவர்கள் சிங்களவர்கள். தமிழர் தயவால் வாழ்ந்தவர்கள். அவர்கள் தமிழர்களை அடிமைப்படுத்திய வரலாறு, நீண்ட நெடியது. உலகில் பல விடுதலை இயக்கங்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் கெரில்லா போர் முறையைத்தான் நடத்தினர். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமானது, மரபுவழிப் போர் நடத்தும் அளவுக்குத் தனி இராணுவத்தையே வைத்து இருந்தனர். அது, தமிழனுக்கான தனிப் பெருமை. 1989-ல் நடந்த போரில் போராளி சங்கர் வீரமரணம் அடைந்த நாளையே, 'மாவீரர் நாள்’ என்று அறிவித்தார் பிரபாகரன்.

       இந்த நாளில் நான் பெருமையாகக் கருதுவது, முதல் மாவீரர் நாளின்போது தலைவர் என்னை அழைத்து இருந்ததைத்தான். அது, இந்திய அமைதிப் படை இருந்த காலம். தலைவரைச் சுட்டுக்கொன்று விட்டனர் என்று பரவி இருந்த வதந்திக்கு, நான் அவரைச் சந்தித்து வெளியிட்ட படமே முற்றுப்புள்ளி வைத்தது. இப்போதும் தலைவர் இருக்கிறார் என்பதைச் சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்குகிறேன். தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகப் பேச, தமிழ்நாடு ஒன்றுதான் இருக்கிறது. நாம் எழுச்சியும் எதிர்ப்பும் எழுப்பாத காரணத்தால்தான் இன அழிப்பு நடந்தது. ராஜபக்ச மற்றும் அவர்களுக்குத் துணையாக நின்ற இந்தியா, பாகிஸ்தான், சீனா மட்டும் இன அழிப்புக்குக் காரணம் இல்லை.

           அமைதியாக நின்ற தமிழ்நாடும் தான் காரணம். அடுத்த தலைமுறையாவது, ஈழத்தில் ஆதரவுக் குரல் எதிர் பார்க்கும்போது, நிச்சயம் தன் குரலை உயர்த்தும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்'' என்று முழங்கினார்.

Pages (26)123456 Next

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP