தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி பொதுக் கூட்டம் - புகைப்படங்கள்

புதன், 25 ஏப்ரல், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி பொதுக் கூட்டம் - 

புகைப்படங்கள்



இலங்கை மீது பன்னாட்டு நீதி மன்றத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், தனித் தமிழீழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 22-04-2012  அன்று கிருஷ்ணகிரி  நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்











தனித் தமிழீழம் அமைய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்

திங்கள், 23 ஏப்ரல், 2012

கிருஷ்ணகிரி:


தென்பெண்ணையாறு தண்ணீரை தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு தடுத்து வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.

கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அளித்த பேட்டி


தற்போது எடுக்கப்பட உள்ள சமூக, பொருளாதார, சாதிவாரிக் கணக்கெடுப்புக்குப் பின் சாதிக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 



 எம்.பி.க்கள் குழு பயணத்தால் பலனில்லை:


          இலங்கைக்கு சென்ற இந்திய எம்.பி.க்கள் குழுவால் பலன் ஏதும் இல்லை.எனவே, ஐ.நா. மேற்பார்வையோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து மக்கள் விரும்புகின்ற ஒரு சுதந்திர அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடத்தி தமிழ் ஈழம் அமைய, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தி.வேல்முருகன். பேட்டியின் போது, மாநில பொதுச்செயலர் வை.காவேரி, மாநிலத் தலைவர் தீரன், மாநில இணைப் பொதுச்செயலர் எஸ்.எஸ்.சண்முகம், மாநில அமைப்புச் செயலர் மே.ப.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


என்.வரதராஜன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல்

புதன், 11 ஏப்ரல், 2012


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். 




ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்புரை

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிதம்பரம்:

      சிதம்பரத்தை அடுத்த ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

   2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என ராமதாஸ் கூறுகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் நான் தொடங்கிய கட்சியைக் கலைத்து விடுகிறேன் என தி.வேல்முருகன் சவால் விடுத்தார். மதியுரை குழு உறுப்பினர் பாலகுருசாமி தலைமை வகித்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆற்றிய சிறப்புரை:

       இடஒதுக்கீடு போராட்டத்தில் பா.ம.க-விற்காக ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த 21 பேர் குடும்பங்கள் இதுவரை கஷ்டப்பட்டு வருகின்றன. வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் வன்னியர்கள் நன்கொடையாக அளித்த தொகையில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு தற்போது ராமதாஸ் மனைவி சரஸ்வதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. வன்னியர் சமுதாயத்திற்காக போராடி உயிர் நீத்தவர்கள் பெயரை இக்கட்டடத்திற்கு நினைவாக வையுங்கள் எனக் கேட்டேன். இவையெல்லாம் கேட்டதால்தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

       கட்சியை விட்டு என்னை நீக்கிய போது தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் என்னிடம், எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள். பெரிய பொறுப்பு தருகிறோம் எனத் தெரிவித்தனர். நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல. தமிழக மக்கள் அனைத்து சாதியினருக்கும் பாகுபாடு பாராமல் பாடுபடத்தான் இந்தக் கட்சியைத் தொடங்கினேன் என்றார். மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன், மாநில பொதுச்செயலாளர் காவேரி, இணைப் பொதுச்செயலாளர் போரூர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் ந.ப.காமராசு, துணைப் பொதுச்செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் சீனுவாசன் நன்றி கூறினார்.


பத்திரப் பதிவு கட்டண உயர்வை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்

புதன், 4 ஏப்ரல், 2012

பண்ருட்டி:

         புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறினார்.

பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அளித்த பேட்டி

         தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையால் தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைப் போக்க நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மத்திய அரசிடம் கேட்டு பெற்று சீரான மின்சாரம் கிடைக்க தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும். கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கு தரவேண்டும் என தமிழக முதல்வர் பிரதமரிடம் கேட்டுள்ளார். கூடங்குளம் மின்சார உற்பத்தி குறைவானது, மேலும் மின்சாரம் கிடைக்க 6 மாதங்களாகும். எனவே மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களின் துயரைப் போக்க நெய்வேலியிலிருந்து மின்சாரத்தை பெற்றுத் தரவேண்டும்.

           மின்சாரம் இல்லாத நிலையில் மின் கட்டண உயர்வு என்பது தேவையற்றது. பல கிராமங்களில் குடிநீர்கூட கிடைக்கவில்லை. புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு திட்டங்கள், பொருள் உதவிகள் பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. அனைத்து அறிவிப்புகளும் பெயரளவில் உள்ளன. விவசாயிகள் பெற்ற கடன்களையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், கடனையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். பத்திரப் பதிவு கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ரத்த உறவு பிரிவினைக்காவது சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தி.வேல்முருகன்.



Pages (26)123456 Next

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP