தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கடலூர்:
      
        புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை 28/02/2012 அன்று உண்ணாவிரதம்  நடந்தது. 

         புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இக்கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர், தி.வேல்முருகன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன், மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மாணவரணிச் செயலாளர் அருள்பாபு, இளைஞரணிச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


சேலத்தில் மார்ச் 4-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்: தி.வேல்முருகன் தலைமை தாங்குகிறார்

புதன், 22 பிப்ரவரி, 2012

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மார்ச் 4-ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச் செயலர் காவேரி, அமைப்புச் செயலர் ப.காமராஜ்ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேலம் மாநகர் ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் சாலையில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி   அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ( 19/02/2012) நடைபெற்றது. 

       சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஏ.பி.குமார் தலைமையில்  நடைப்பெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் துணை அமைப்பாளர் சந்திரன், ஏ.பி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொது செயலாளர்கள் சக்திவேலன், ஜெயமோகன் ஆகியோர் பேசினார்கள். 

    கூட்டத்தில், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர்கள் எஸ்.கே.சக்திவேலன், கே.ஜெயமோகன், பொதுக்குழு உறுப்பினர் பி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 

1. சேலம் மாநகரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை போக்க, சேலம் மாநகராட்சி பகுதிகளில் 2  நாட்களுக்கு ஒருமுறை சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 2.சேலம் புதிய பேருந்து  நிலையத்தின் சுற்றுப்புறத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; 

3. சேலம் மாநகரில் குறைந்தது 10 அல்லது 12 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகத்தை சீரமைத்து 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

4. சேலம் மரவனேரி பிரதான சாலை மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 5. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மார்ச் 4-ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச் செயலர் காவேரி, அமைப்புச் செயலர் ப.காமராஜ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

பண்ருட்டிதி.வேல்முருகன் ஈழத்தமிழர் அகதிகளுக்கு தானேநிதி கொடையளிப்பு

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012




தானேநிதி கொடையளிப்பு 19 பிப்ரவரி, 2012 (4 புகைப்படங்கள்)

பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் குவைத் வாழ் தமிழர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட  ரூபாய் 50,000.00, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு. பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் உதவியாலும் முன்னிலையிலும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலும் குள்ளஞ்சாவடியிலும் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் அளிக்கப்பட்டது.








Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

தானே புயலால் பாதிக்கபட்ட கடலூர் மாவட்டத்தில் கல்வி கடனை ரத்து செய்ய கோரி இளம்புயல் மாணவர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

வியாழன், 16 பிப்ரவரி, 2012


இளம்புயல் மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

           அன்புள்ள தமிழ் சொந்தகளே தானே புயலால் பாதிக்கபட்ட கடலூர் மாவட்டத்தில் இருந்து மாநிலத்தின் எந்த கோடியில் படிகின்ற படிகின்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எதிர் வரும் ஐந்து வருடங்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரியும் கல்வி கடனை முழுவதுமாக ரத்து செய்ய கோரியும் வரும் 28.02.2012  (செவ்வாய்க்கிழமை) காலை ஏழுமணி அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் மாபெரும் உண்ணாவிரத அறவழி போராட்டம் நடை பெற உள்ளது. 

    இந்த உண்ணாவிரத அறவழி போராட்டத்தில் மாணவ சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு அதரவு தாருங்கள்.

 சிறப்பு விருந்தினர் 
  
      சிறப்பு விருந்தினராக  முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி . தி.வேல்முருகன் கலந்து கொள்கிறார்.

--------------------------இவன் இளம்புயல் மாணவர் சங்கம்-------------------------

தமிழ்நாடு மால்கம் கழக கெளவத் தலைவராக பண்ருட்டி தி. வேல்முருகன் நியமனம்

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கடலூர்:

       தமிழர்களின் கலாசாரமும் வீர விளையாட்டுகளும் புத்துயிர் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.  

         தென்மண்டல மால்கம் விளையாட்டுப் போட்டியை நடத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு மால்கம் கழக ஆலோசனைக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

மால்கம் கழக கெளவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூட்டத்தில் பேசியது: 

          தமிழக நாகரிகமும், கலாசாரமும் வீர விளையாட்டுகளும் மறைந்து, நுகர்வு கலாசாரம் பெருகி வருகிறது. மாணவர் சமூகம் மாறிவிட்டது. கல்வி முறை மன அழுத்தம் தருவதாக மாறியிருக்கிறது. குழந்தைகள் மோசமான கலாசாரத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உறவு முறைகள் எல்லாம் மறைந்து விட்டது. கல்வி நிறுவனங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கலாசாரத்தைச் சீர்குலைந்து வருகிறது. சினிமா கலாசாரத்தால் மாணவ சமுதாயம் சீரழிகிறது. மன அழுத்தம் தரும் கல்வி முறைதான் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.  தமிழ்ச் சமூகத்தின் வேர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 

         தமிழர்களின் வீர விளையாட்டுகள் மீண்டும் வளர வேண்டும். அவற்றுக்கு புத்துயிரூட்ட வேண்டும். அவற்றை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.  கிக் பாக்ஸிங் என்ற தமிழக குத்துச் சண்டைக் கலை மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. இன்றைய தலைமுறை இக்கலையைக் கற்க வேண்டும். நம்மிடமிருந்து சென்ற இக்கலைக்கு வேறு வடிவம் கொடுத்து அதனைச் சிலர் புகழ்பாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றார் வேல்முருகன்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி தமிழ்நாடு மால்கம் கழகத் தலைவரும் உடல்கல்வி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஆர்.திருமலைசாமி பேசுகையில், 

          தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல மால்கம் விளையாட்டுப் போட்டி தமிழகத்தில் மே மாதம் நடைபெறும் என்றார்.  மால்கம் கழக பொதுச் செயலாளர் உலகதுரை, துணைச் செலாளர் ஆதம் சாக்ரட்டீஸ், திருமால்வளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"தந்தையும் தம்பியும்" நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பண்ருட்டி தி.வேல்முருகனின் உரை - காணொளி

  "தந்தையும் தம்பியும்" நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகனின் உரை - காணொளி 


நிகழ்ச்சி இடம்: தி.நகர், சென்னை

நாள்: 02-12-2011






தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் - காணொளி

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012





சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் பன்னாட்டு தோல் தயாரிப்பு நிறுவனங்களின் கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்தும், இலங்கை அரசின் கொடியை சென்னை வர்த்தக மையத்தில் ஏற்றி வைத்து இருக்கும் இந்திய மத்திய அரசின் போக்கை கண்டித்தும் "தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இளம்புயல் பாசறை நிறுவனருமான முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாரதஜோதி இளம் புயல் திரு.வேல்முருகன் ஆணைக்கு இணங்க  தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தி உள்ளோம்.  12 கோடிதமிழர்களின் உணர்வை மதிக்காத இந்திய அரசை கண்டிக்கின்றோம்.



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதிய உறுப்பினராக இணைய, உறுப்பினர் அட்டை பெற

புதன், 8 பிப்ரவரி, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் அட்டை பெற:

மிழக வாழ்வுரிமைக் கட்சியில் புதிய உறுப்பினராக இணையவும், உறுப்பினர் அட்டை பெறவும் அந்தந்த ஊரில் உள்ள கிளைக் கழகத்தில்  தொடர்பு கொண்டு உறுப்பினராக  இணைவதற்கான படிவத்தை நிரப்பி கொடுத்து உறுப்பினர் அட்டையை பெறலாம். மேலும் சென்னை போரூரில் உள்ள மிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினராக  இணைவதற்கான படிவம் கிடைக்கும்.



 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலக முகவரி:




கட்சி தலைமையகம்,
எண்.145, எம்.எஸ்.ஆர். வளாகம் ,
குன்றத்தூர் சாலை,
போரூர், சென்னை  - 600116.


கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012


        கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டமன்றத்  தொகுதிகளுக்கான தமிழ வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா, நேற்று  சேத்தியாத்தோப்பில்  நடந்தது. தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விழாவில் கலந்துகொண்டு பேசினார். 

 தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது

         ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழக  வாழ்வுரிமைக் கட்சி  துவக்கப்பட்டுள்ளது. 


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

    கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான ண்ருட்டி தி.வேல்முருகன்அறிவித்துள்ளார்.


இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிவிப்பு

         எதிர்கால தலைமுறையினரையும் இந்த மண்ணையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் அணு உலைகளை எதிர்த்து காந்திய வழியில் போராடிவரும் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது நேற்று அணு உலைக்கு ஆதரவனோர் என்ற பெயரில் இந்து மக்கள் கட்சி மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கைக்ககூலிகளாலும், கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அமைதியான முறையில் அரசின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள சென்றவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினரின் முன்னால் தாக்கியது காட்டுமிராண்டித்தனமானது.

           இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வெறிச்செயலில் ஈடுபட்ட பாசிச இந்து முன்னணியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டோரை கண்டித்து (3-2-2012) ந் தேதி காலை10 மணியளவில், பனகல் மாளிகை எதிரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி , நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

         இதில் மனித நேய ஆர்வலர்களும்,தமிழின உணர்வாளர்களும், இளைஞர்கள், பொதுமக்களும், பெருந்திரளாய் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக திரு.சக்திவேலன் நியமனம்: பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவிப்பு

புதன், 1 பிப்ரவரி, 2012

சேலம்: 
      
      தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக, சேலத்தை சேர்ந்த சக்திவேலன் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான   பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
 
தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக, சேலம் சக்திவேலன் நியமிக்கப்படுகிறார். 

சேலம் தெற்கு மாவட்ட அமைப்பாளராக முத்து, மாநகர அமைப்பாளராக மெகாபைவ் ஆனந்தன் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
 
 
         தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக்திவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான   பண்ருட்டி தி.வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர் தீரன், மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், இணைச் செயலாளர் சண்முகம், மற்றும் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Pages (26)123456 Next

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP