நபிகள் நாயகத்தின் நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் சமூகங்களிடையேயான ஒற்றுமை நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் ரமலான் பெருநாள் வாழ்த்துச்செய்தி

செவ்வாய், 29 ஜூலை, 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள ரமலான் பெருநாள் வாழ்த்துச் செய்தி:

ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பெருநாளை கொண்டாடுகிற இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய உறவுகளின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணத்துக்குடன் வாழ வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் போதனை. இதை நாம் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.

ரமலான் பெருநாளில் ஈழத்தில், பாலஸ்தீனத்தில் என இஸ்லாமிய உறவுகள் வேட்டையாடப்படுகிற பெருந்துயரம் முடிவுக்கு வரவும் பிரார்த்திப்போம். மனித நேயம் மலரவும் ஒடுக்கப்படுகிற மக்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க குரல் கொடுக்கவும் இந்த ரமலான் திருநாளில் சூளுரைப்போம். அண்ணல் நபிகள் நாயகத்தின் நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் சமூகங்களிடையேயான ஒற்றுமை நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.

இந்நன்னாளில் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

வெள்ளி, 25 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
 
  "பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் நல்லுறவையே இந்திய பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார் என்றும், தமிழக குரல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் ராஜபக்சேவிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சுப்பிரமணியசாமி தலைமையிலான குழு தன்னிச்சையாக சென்றதா? அல்லது பா.ஜனதா கட்சியே அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய மோடி அரசு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை எதுவும் இல்லை. இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து பேச சுப்பிரமணியசாமி யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மத்திய அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் மௌனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கடல் ஆராய்ச்சி மையங்களை நிறுவுவது தொடர்பாக சுப்பிரமணியசாமியிடம் இந்திய ஜனாதிபதி பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? இலங்கை சென்ற சுப்பிரமணியசாமி குழு பற்றி மோடி அரசின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தமிழக பா.ஜனதா கட்சி ஆகியவை கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இது பச்சை தமிழின துரோகம் அல்லவா?’’

Read more...

அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

செவ்வாய், 22 ஜூலை, 2014


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அ.தி.மு.க சார்பில் 21.07.2014 (திங்கட்கிழமை) அன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் தோழமை கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் சிறப்பு நிகழ்ச்சி

ஞாயிறு, 20 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் சிறப்பு நிகழ்ச்சி 19.07.2014 அன்று மாலை திருவல்லிக்கேணி அல் மாலிக் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொருளாலர் அ.அக்ரம்கான் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், வை.காவேரி, சத்திரியன் வேணுகோபால், காமராஜ், அக்ரம்கான், முகமதுஷபிக், தேவ்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 








Read more...

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சன் செய்திகள் தொலைக்காட்சியில் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி - காணொளி

வெள்ளி, 18 ஜூலை, 2014

சன் செய்திகள் தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி - 17.07.2014 


Read more...

இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

இந்திய முஸ்லீம் லீக் கட்சி நடத்திய  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொருளாலர் அக்ரம்கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். 








Read more...

மத்திய தேர்வாணையத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை முற்றுகையிடும் போராட்டம்

வியாழன், 17 ஜூலை, 2014

மத்திய அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் பிற மொழி இனத்தவர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்படுகிறது. 2006–2012 ஆண்டுகளுக்கு இடையே நடந்த தேர்வில் 493 காலி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 478 பேர் வடமாநிலத்தவர்கள். 15 பேர் மட்டுமே தென்மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒன்று, இரண்டு பேர்தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வு பெற்றனர். மத்திய தேர்வாணையத் தேர்வுகளை மாநில அளவில் நடத்த வேண்டும். தேவையானால் அதற்கு இசைய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். ஆங்கிலத்தோடு அந்தந்த மாநில மொழிகளிலும் வினாத்தாள்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 17.07.2014 (வியாழக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை மத்திய அரசுப் பணிகளில் தமிழர் வேலைவாய்ப்பு பறிப்புக்கு எதிராக கூட்டியக்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 
முற்றுகை போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வேணுகோபால், செந்தில்குமார், மனித நேய மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கரு.அண்ணாமலை, மே 17 இயக்கம், இளம் தமிழகம் இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 




 
 

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 05.07.2014 அன்று தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது

ஞாயிறு, 6 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்  05.07.2014 அன்று காலை 10.00 மணி அளவில் கிண்டி தி.செக்கர்ஸ் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
 
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:
 

















Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP