தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் 02.02.2014 அன்று வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெறும்

புதன், 29 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் 02.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு: 978686286


Read more...

புதுச்சேரியில் "உயிர்வலி மறுக்கப்பட்ட நீதி" ஆவணப்படம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிடுகிறார்

புதுச்சேரியில் "உயிர்வலி மறுக்கப்பட்ட நீதி" ஆவணப்படம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிடுகிறார்.
 
 

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை, திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28.01.2014) மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தி.வேல்முருகன் அவர்களின் இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு வருமாறு தி.வேல்முருகனை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைத்துள்ளார். இதற்கு தி.வேல்முருகன் அவர்கள் கட்சியின் நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து முடிவை 23.02.2013 அன்று சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாட்டில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் வடமாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினால் ஏற்படும் சரிவை தற்போது வடமாவட்டங்களில் வேகமாக வளர்ந்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூலம் ஈடுகட்டலாம் என்று திராவிட முன்னேற்ற கழகம் கருதுகிறது.

Read more...

திருவாரூர் கே.தங்கராசு அவர்களின் படத் திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்கிறார்

வியாழன், 23 ஜனவரி, 2014

திருவாரூர் கே.தங்கராசு அவர்களின் படத் திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்கிறார்.



Read more...

தமிழ்ச் சமூகத்தில் பிறந்த அனைவருக்காகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாடுபடும் - விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.வேல்முருகன் பேச்சு

புதன், 22 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 21.01.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் ராமரவி அலெக்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஆர்.குமரன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சேட், சுதாகர், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, பலராமன், மணிகண்டன், பூண்டி ரவி, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொது செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர் கொற்றவன் மூர்த்தி, துணை பொது செயலாளர் கனல் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிலிங்கம், மாநில தொழிற்சங்க செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் சசிக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் அலேக்ஸ்தீனா, பாசறை செயலாளர் மின்னல் தினேஷ், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் இளம்வழுதி, மாவட்ட துணை செயலாளர் டேவிட், மாவட்ட தொண்டர்படை செயலாளர் சுமன், மாவட்ட மாணவரணி தலைவர் சிலம்பரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியி
ன் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:

வன்னியர்களை பயன்படுத்திக் கொண்டு பதவியைப் பிடித்த ராமதாஸ், அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை. பா.ம.க மத்தியில் கூட்டணி அரசில் இருந்தபோது நேர்முக உதவியாளர் பதவி உள்பட அனைத்து பதவிகளும் அவர்களது உறவினர்களுக்கே வழங்கப்பட்டன. பா.ம.க.வுக்கு கொடி பிடித்தவர்களுக்காகவும், பா.ம.க.வின் வளர்ச்சிக்காக வழக்குகளை சந்தித்தவர்களுக்காக இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு கூட ஒன்றும் செய்யவில்லை. இந்த இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 27 குடும்பங்களின் வாரிசுகளுக்கே ஒன்றும் செய்ய முடியாதவரா 2 கோடி வன்னியர்களை காக்கப்போகிறார்? ஆனால் வன்னியர்களுக்கு பாமக செய்யத் தவறியதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்யும். வன்னியர்கள் மட்டும் இன்றி தமிழ்ச் சமூகத்தில் பிறந்த அனைவருக்காகவும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி பாடுபடும். வரும் பிப்ரவரி 23-ம் தேதி எங்கள் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. அப்போது கூட்டணி குறித்த அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம் என்றார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:


1. இலங்கையில் ஐ.நா மேற்பார்வையில் சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

2. ஐ.நா. அவையில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இது குறித்து இந்தியா வலியுறுத்த வேண்டும்,

3. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டிப்பது,

4. செங்கல்பட்டு, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோருவது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கோலியனூர், காணை, திருநாவலூர், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.






Read more...

பாட்டாளி மக்கள் கட்சியை போட்டியாக கருதவில்லை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.வேல்முருகன் அறிவிப்பு

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 18.01.2014 அன்று நடைபெற்றது.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று ஆற்றிய சிறப்புரையாற்றினா
ர்.

பின்னர்  தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் 18.01.2014 அன்று அளித்த பேட்டி:

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால். கட்சத்தீவை நாம் மீண்டும் பெற வேண்டும். கட்சத்தீவை பெற தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் கட்சத்தீவு இலங்கைக்கு சொந்தமென மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. இந்த அபிடவிட்டை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சுத்தம் செய்யப்படும் குடிநீர் போக மீதமுள்ள நீரை காவிரி ஆற்றில் திருப்பி விடுகின்றனர். அந்த நீரை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தர்மபுரி மாவட்டத்திற்கு திருப்பி விடவேண்டும். கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் வாயு நிரப்பும் குழாய் பதிப்பதை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.  
வருகிற மார்ச் இறுதியில் ஐ.நா. சபையில் நடைபெற உள்ள மனித உரிமை மாநாட்டில் இலங்கைத் தமிழர், புலம் பெயர்ந்த ஈழத் தழிழர்களிடம் சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க் குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகத்தில் எங்கள் கட்சியில் 7.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2.5 லட்சம் பேர் இணையதளம் மூலம் உறுப்பினர்களாகி உள்ளனர்.

சேலத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எங்களது கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தப்படும்.

பாமக உள்ள கூட்டணியில் சேரமாட்டோம்: 

பாமகவை போட்டியாக கருதவில்லை. அதேவேளையில் அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம். இழந்த தேர்தல் அங்கீகாரத்தை மீட்கும் நெருக்கடியில் பாமக உள்ளது. அதுபோன்ற நெருக்கடி எங்களுக்கு இல்லை.

காங்கிரஸ் மட்டும் எதிரி: 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எதிரியாக கருதுகிறோம். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் எங்களுக்கு எதிரிதான்.






Read more...

சிவகங்கை, சிவகங்கை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது

திங்கள், 13 ஜனவரி, 2014

மதுரை:

மதுரை, சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்   நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி:
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக, வாழ்வுரிமைக்காக எங்கள் கட்சி போராடி வருகிறது. நஞ்சு இல்லாத உணவு, நோயற்ற வாழ்க்கை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்விக்கொள்ளையை தடுத்தல் ஆகியவற்றுக்காக பாடுபடுவதே கட்சியின் கொள்கையாகும்.

பா.ம.க.அணி கிடையாது 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு விழா வருகிற பிப்ரவரி 23–ந் தேதி நடக்கிறது. அப்போது, பாராளுமன்றத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். ஆனால், காங்கிரஸ் மற்றும் பா.ம.க.கூட்டணியில் இடம் பெற மாட்டோம். 

தமிழக மீனவர்கள்விடுதலை:

தமிழக மீனவர்கள் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரையும் பொங்கல் பண்டிகையையொட்டி விடுதலை செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு வெளியுறவுத்துறை செயலாளரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

கெயில் நிறுவனம் சார்பில் எண்ணை குழாய் பதிக்கும் பணிகளை நெடுஞ்சாலை பகுதிகளில் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீத்தேன் வாயு எடுக்கும் திட்டமும் விவசாயத்துக்கு எதிரானது. அந்த திட்டத்தை கைவிட வேண்டும். கேரள மாநில அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம்காட்டி அட்டப்பாடியில் வசிக்கும் 30 ஆயிரம் தமிழர்களையும் வெளியேற்ற நினைக்கிறது. ஆனால், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கிறது. இது குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேம்பாலங்கள் கட்ட

மதுரையில் வைகையாற்றில் தொழிற்சாலைகளின் கழிவு நீர், சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். இதற்காக தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி பழைய வைகை ஆறு போல மாற்ற வேண்டும். சிவகங்கை பகுதியில் சாயப்பட்டறை கழிவு நீர் கிருதுமால் நதியில் கலப்பதை தடுக்க வேண்டும். மதுரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்ட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் எண்ணை நிறுவனங்களை கொண்டு வர வேண்டும். 

பேட்டியின் போது  மாநில அமைப்புச் செயலாளர் காமராஜ், துணைப்பொதுச் செயலாளர் தமிழ்நேசன், மதுரை மாநகர அமைப்பாளர் துரைசேகர், புறநகர் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் உடன் இருந்தனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் - தி.வேல்முருகன் சிறப்புரை

சனி, 11 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 10.01.2014 (வெள்ளிக்கிழமை) அன்று கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
 செயல்வீர்கள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வண்டும் என்று கேட்டுக்கொண்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாமக சேரும் கூட்டணியுடன், கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்து, பிப்ரவரி மாதம் 23ம் தேதி அறிவிக்கப்படும்.








Read more...

நாடாளுமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை நோக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்லும் - சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

செவ்வாய், 7 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரம் பைசல் மஹாலில் 06.01.2014 அன்று நடைபெற்றது.

செயல் வீரர்கள் கூட்டத்திற்கு கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஆ.ரமேஷ் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி.தமிழ், வாசு.சரவணன், ச.கோபு, என்.எஸ்.டி.தில்லை, இ.கரிகாலன், ம.கஜேந்திரன், கி.பரசுராமன், ஆண்டவர் செல்வம், கோ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மரு.வை.காவேரி, மாநில அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ், மாநில இணைப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், மாநில நிர்வாகக்குழு ச.க.ராஜேந்திரன், மாநில மதியுரை குழு மு.பாலகுருசாமி, மாநில மாணவரணி தலைவர் ரவி.பிரகாஷ், மாநில தமிழர்படை தளபதி வே.க.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். சிதம்பரம் நகரச் செயலாளர் கோவி.தில்லைநாயகம் நன்றி கூறினார்.


செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி தெரிந்து கொள்ள கிராமங்களிலும், வீடுகள் தோறும் கொடிகள் ஏற்றி சுறு, சுறுப்பாக உழைக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமைக் கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்கள் சக்தியாக திகழும். திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அக்கட்சிகளின் மாவட்டம், ஒன்றியம், நகரம் உங்கள் வீடு தேடி வர வேண்டும். நமது வாக்கு வங்கிகளை எதிரிகள் அறிந்து எடை போட்டு மதிக்க வைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், வன்னியர் சமுதாயத்தினரையும் மோதவிட்டு அரசியல் லாபம் தேடுபவர் ராமதாஸ். ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் அதிகாரத்தில் இருந்த போது எத்தனை வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தந்தனர். பாமகவினர் மீது பல்வேறு வழக்குகளைதான் பெற்று தந்தனர்.

வேல்முருகன் ஊழலுக்கு எதிரானவன், நேர்மையானவன், தமிழர் உரிமைக்காக போராடுபவன் என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். கட்சி தொடங்கி 9 மாதத்தில் ஆம்ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியை பிடித்துள்ளது. ஏன் நாம் பிடிக்க முடியாது. சமீபத்தில் கூடங்குளத்திற்கு வந்த ஆம்ஆத்மி கட்சி அரசியல் ஆலோசகர் என்னை சந்தித்து உங்களது நடவடிக்கைகளை உற்று நோக்கி வருகிறோம். எனவே எங்களிடம் கைகோர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பலம் பெற்றுள்ள நாம் மாற்று அரசியலை நோக்கி செல்கிறோம். இன்னும் கொஞ்சம் காலத்தில் தமிழகத்தில் மாற்று அரசியல் வரும் என தி.வேல்முருகன் தெரிவித்தார்.







Read more...

சேலத்தில் நடைபெறும் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கப்படும்

சனி, 4 ஜனவரி, 2014

தஞ்சாவூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பொதுக்குழுக் கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் இன்று (04.01.2014) காலை ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தார்.

அப்போது அவருக்கு தஞ்சை ரெயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சில்லூர் ஆர்.பி.தமிழ்நேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய மாவட்டச் செயலாளர் துரை. கார்த்திக்கேயன், தலைமை நிலைய செயலாளர் கனல்.கண்ணன், இளைஞரணி செயலாளர் பாபு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முகம்மது ஆரிப், மத்திய மாவட்ட பொருளாளர் ரவீந்திர நாயுடு, மத்திய மாவட்ட தலைவர் அண்ணா. வினோத், நகர செயலாளர் முகம்மது எகியா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் அளித்த சிறப்பு பேட்டி:


தமிழக மீனவர்கள் கடந்த சில மாதங்களாக இலங்கை சிங்கள கடற்படையினரால் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டு உள்ளனர். பல ஆண்டுகாலமாக 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கும் முன்பு தமிழக மீனவர்களின் 85 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலைப்பாட்டில் மத்திய அரசும், மத்திய உளவுத்துறை அமைக்கவும் உடனே தலையிட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். பறிக்கப்பட்ட படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் வேளையில், பாகிஸ்தான் நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே அதில் தலையிட்டு தீர்த்து வைக்க முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பல்வேறு காரணங்களுக்காக வரும் நபர்களை பாதுகாப்புடன் அனுப்பவும், அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் முழு உதவிகள் செய்து அவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. எல்லை தாண்டி இந்தியாவிற்கு வரும் நபர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு, ஏன் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைகளில் மட்டும் செவி சாய்க்காமல் உள்ளது என்பது கேள்வி குறியாக உள்ளது. எனவே, பாகிஸ்தான் நாட்டினரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களை பாதுகாக்கும் செயல்பாட்டில் மத்திய அரசு தவறும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள கடற்படை போலீசார் மூலம் தமிழக மீனவர்களை பாதுகாக்க நிறுத்துவோம் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

சென்னையில் சூப்பர் ஸ்பெசாலிட்டி என்ற மருத்துவமனை தமிழக அரசு சார்பில் திறக்கப்பட உள்ளது. இதில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் கால்நடைகள் கோமாரி நோய் தாக்குதலால் இறந்து வருகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் இது வரை வழங்கப்பட வில்லை. எனவே, இந்த நோய் தாக்குதலால் இறந்த மாடு ஓன்றுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் ஆணும், ஆணும் சேர்ந்து வாழலாம். பெண்ணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்றும், ஓரினச்சேர்க்கையில் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று கூறுவது இந்திய நாட்டின் பண்பாட்டை சீர் குலைக்கும் செயலாகும். இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கும் கொள்கை கோட்பாடுகள் என்பது கிடையாது. தேர்தலுக்காகவும், பதவிகளுக்காகவும் தான் கூட்டணிகளை வைத்துக் கொள்கிறார்கள். தமிழக மக்களின் நலனில் அவர்கள் அக்கறைக் காட்டுவது குறைவாக தான் உள்ளது. கூட்டணிகளை வைத்து மக்களை ஏமாற்றி தான் வருகிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா வருகிற பிப்ரவரி 2–ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. அப்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை அறிவிக்க உள்ளோம். எங்கள் கட்சியின் கொள்கைகளை மதித்து, எங்களுக்கு அழைப்பு விடுக்கும் கட்சிகளுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம். காங்கிரஸ் மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணியில் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.

Read more...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யக் கோரி தி.வேல்முருகன் தலைமையில் சென்னை சுங்கத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்

வெள்ளி, 3 ஜனவரி, 2014

இலங்கை சிறையில் வாடும் 210 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரியும், கச்சத்தீவை மீட்க கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று 03.01.2014 (வெள்ளிக்கிழமை) சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், இணைப் பொது செயலாளர் போரூர் சண்முகம், தொழிற்சங்கத் தலைவர் சைதை சிவா, கொற்றவமூர்த்தி, செந்தில்குமார், வில்லிவாக்கம் தேவ்ராஜ், மாணவர் பாசறை தலைவர் ரவிப்ரகாஷ், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் உள்ள மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உட்பட கட்சி நிர்வாகிகளை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினார்கள்.





















Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP