தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு தினம் - பண்ருட்டி தி. வேல்முருகன் வீரவணக்கம்

புதன், 30 ஜனவரி, 2013

     




             இந்திய – சிங்கள அரசுகள் கூட்டாக நடத்திய தமிழீழ இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி, 2009 சனவரி 29 அன்று, சென்னையிலுள்ள இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் முன் தீக்குளித்து உயிரீகம் செய்த மாவீரன் முத்துக்குமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் 29.01.2013 அன்று தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது.  அந்நாள், தமிழீழ இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழ விடுதலை வேண்டியும் உயிரீகம் செய்த ஈகியர் அனைவரையும் நினைவு கூரும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகின்றது.

         சென்னையில் தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழீழ விடுதலைக்காக உயிரீஈகம் செய்த 22 ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில், 22 அடி ஈகியர் நினைவுத் தூண் சென்னை கொளத்தூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 29.01.2013 காலை 9.30 மணயளவில், ஈகி முத்துக்குமாரின் தங்கை திருமதி தமிழரசி குடும்பத்தார் உள்ளிட்ட பல ஈகியரின் குடும்பத்தினர் திரண்டிருந்தனர். காஞ்சி மக்கள் மன்றம் சாபில், தோழர்கள் மகேசு – ஜெசி ஆகியோர் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஈகியர் நினைவுச்சுடர் அங்கு ஏற்றப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு தி.வேல்முருகன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு வன்னியரசு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தமிழின உணர்வாளர்களும் அங்கு வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை நகர த.இ.மு. செயலாளர் தோழர் வினோத் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்திருந்தார்.


Read more...

விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்புரையாற்றினார்

சனி, 26 ஜனவரி, 2013












 
 
 
 
விழுப்புரம்:

      விழுப்புரத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா 25/01/2013 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.ரவி அலெக்ஸ் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்கள் கிழக்கு ஆர். குமரன், மேற்கு ரா.சசிக்குமார் முன்னிலை வகித்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

  ஈழத் தமிழர்களிடத்தில் அரசியல் தீர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். குறைந்தபட்சம் அதற்காகவாவது நாம் போராட வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி நதிநீர் விவகாரம், முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளில் சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஓரணியில் திரள்வோம்!

 
 
 
 
 

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா, விழுப்புரம் (25.01.2013) - தி.வேல்முருகன் எழுச்சியுரையாற்றுகிறார்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் மற்றும் மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப்போக்கை கண்டிக்கும் விதமாக வருகின்ற வெள்ளியன்று (25-1-2013) விழுப்புரத்தில் ரங்கநாதன் சாலையில் கல்யாண் திரையரங்கம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. 

எழுச்சியுரை: தி.வேல்முருகன் 


Read more...

தமிழர்களின் வாழ்வில் விழாக்கள் - பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் பொங்கல் தின சிறப்புரை

வெள்ளி, 11 ஜனவரி, 2013

கோவையில் கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் 5ஆம் ஆண்டு தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி திரு. தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு " தமிழர் வாழ்வில் விழாக்கள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.அந்நிகழ்ச்சியின் அழைப்பிதழ்.


நாள்: 11-01-2013
 










Read more...

2013 ஆண்டில் வளரும் தலைவர்கள் கருத்துக் கணிப்பில் என்ற பண்ருட்டி தி.வேல்முருகன் தேர்வு

செவ்வாய், 8 ஜனவரி, 2013

இந்தியா டுடே வார இதழால் 2013 ஆண்டில் வளரும் தலைவர்கள் என்ற கருத்துக் கணிப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...







Read more...

பண்ருட்டி தி.வேல்முருகனை சமூக வலைத்தளங்களின் செய்தி நாயகர் என இந்தியா டுடே வார இதழ் தேர்ந்தெடுப்பு

புதன், 2 ஜனவரி, 2013

முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவு:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை இந்தியா டுடே வார இதழ் 2012ம் ஆண்டின் செய்தி நாயகர் என தேர்ந்தெடுத்துள்ளது அது குறித்து இந்த வார இந்தியா டுடே இதழில் வெளியிடப்பட் டுள்ள செய்தி.



Read more...

பாலியல் வன்கொடுமைக்கு மதுதான் காரணம் - பண்ருட்டி தி.வேல்முருகன்








கடலூர்:

       பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் மதுதான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறினார்.

      சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் செயலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் பாசறை சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் 31/12/2012 அன்று  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மகளிரணி செயலர் அமராவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் பேபி, மாலதி, ஐஸ்வர்யா, பத்மா, சந்திரா, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவி சுந்தராம்பாள் வரவேற்றார்.

கண்டன ஆர்பாட்டத்தில் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

       டில்லியில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு மாணவி இறந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்  தலைவி சோனியா ஆகியோரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டது. தமிழகத்தில் விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி என பல பகுதிகளிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் காமக்கொடூரர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும். ஆசிரியர்களால் மாணவிகள் கற்பழிக்கப்படுகின்றனர். காதல் இல்லாத சினிமா இல்லை. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கற்பழிப்புக்கு அடிப்படைக் காரணம் மது. மதுவை ஒழிக்க பெண்கள் போராட வேண்டும். பெண் பிள்ளைகளை, தனியாக டிவி பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு வேல்முருகன் பேசினார். .

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP