தானே புயல் சேதம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பண்ருட்டி தி. வேல்முருகன் வேண்டுகோள்

சனி, 31 டிசம்பர், 2011

கடலூர் : 

       தானே புயல் சேதம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பண்ருட்டி தி. வேல்முருகன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.
 
இது குறித்து   பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள செய்திக்  குறிப்பு 
 
         கடலூர் , புதுவை, நாகை, விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வீசிய வரலாறு காணாத பலத்த புயலால் எண்ணிலடங்கா இழப்புகள் ஏற்ப்பட்டுள்ள நிலையில் மீனவர்ளும் பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள் இயல்புநிலைக்கு திரும்ப பதினைந்து நாட்களுக்கு மேலாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது .
 
 
           இந்நிலையில் அத்யாவசிய வசிய தேவைகளான குடிநீர் உணவு உடை மருத்துவம் ஆகியவை இன்றியும் அடிப்படை வசதிகளான மின்சாரம் இன்றியும் குடியிருப்புகள் சிதைந்த நிலையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து போக்குவரத்து தொலைதொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்ட நிலையிலும் அவதியிற்றிருக்கும் அம்மக்களின் துயரத்தை போக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் மீட்ப்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் 
 
 
    மேலும் பெருந்துன்பத்திற்குள்ளாகியிருக்கும் நம்மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசு சார்பற்ற தொண்டு அமைப்புகளும் தம்மால் இயன்ற மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.
 
 

Read more...

மக்கள் பிரச்னைக்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் உயர்மட்டக் குழு: பண்ருட்டி தி.வேல்முருகன்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

சிதம்பரம்:

புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன்  கூறியது: 

            முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு மின்சாரம் செல்லப்படுவதை நிறுத்தக் கோரி நெய்வேலியில் போராட்டம் நடத்த உள்ளோம். மக்கள் பிரச்னைக்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்க உள்ளோம்.

              வரும் ஜனவரி 15-ம் தேதி தை முதல் நாளான தமிழர் திருநாளன்று ஒரு புதிய கட்சி தொடங்க உள்ளோம், சென்னையில் முன்னாள் எம்.பி-க்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் என்னோடு தொடர்பில் உள்ளனர். இவர்களும் புதிய கட்சிக்கு வருவார்கள். 

          பேட்டியின் பொது   முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சண்முகம், காவேரி, காமராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more...

தை முதல்நாளில் புதிய கட்சி: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

வியாழன், 29 டிசம்பர், 2011

       முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன்  நேற்று புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர் களுடன்  சேத்தியாதோப்பில் ஆலோசனை நடத்தினார். 

அப்போது முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது 

      "நான் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளேன். ஜனவரி 15-ந் தேதி தை முதல்நாளில் இந்த கட்சி தொடங்கப்படும். கடசியின் பெயர், மற்றும் கொடி போன்றவை பின்னர் முடிவு செய்யப்படும். புதிய கட்சி
பா.ம.க.வுக்கு மாற்றாக புதிய  கட்சியாக இருக்கும். ஜனவரி 15-ந் தேதி மக்களை திரட்டி பொது கூட்டம் நடத்துவேன் அப்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன்.   

          இந்த கிராமத்தில் ஏராளமான வன்னியர்கள் உள்ளனர். இட ஒதுக்கீட்டுக்காக தீவிரமாக போராட்டம் நடத்தியவர்கள் எனவேதான் இந்த பகுதியை தேர்வு செய்து எனது கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிறமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு கட்சி பெயரை முடிவு செய்வேன். மேலும் தமிழக தேர்தல் அலுவலகம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றிடமும் ஆலோசனை நடத்தி கட்சி பெயரை தேர்வு செய்வோம். இதற்காக விரைவில் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் பேச இருக்கிறோம்.  எங்கள் கட்சி தாய் தமிழர்களுக்காக போராடும் சாதி, மதம் சார்பற்ற கட்சியாக இருக்கும். எல்லாதரப்பு மக்களையும் கவரும் வகையில் கட்சியை நடத்துவோம். நாங்கள் கட்சி தொடங்கியதும் ஏராளமான பிரமுகர்களும், தொண்டர்களும் எங்கள் கட்சியில் சேர உள்ளனர்’’ என்று கூறினார். 

     கூடத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் பு.தா.இளங்கோவன், மற்றும் இளம் புயல் பாசறை  நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் 

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் நீங்கள் ஒரு ஒரு நாள் முதல்வர் - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா

செவ்வாய், 27 டிசம்பர், 2011

இந்தியாவின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் பாரதஜோதி தி.வேல்முருகனை பாராட்டி பேசிய  சில தலைவர்கள் 


கடலூர் மாவட்ட இளைஞரின்  எழுச்சிநாயகன் நீ..... 

அன்று சட்ட மன்றத்தில் முதல்வர் செல்வி ஜெயலலிதா 

 
        அன்று சட்ட மன்றதில் மணல் கொள்ளையை தடுக்க அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு நூறு கோடி வருவாய் கிடைக்கும் என்று சொன்ன அடுத்த நிமிடமே வேல்முருகன் நீங்கள் அமைச்சராக இருக்கவேண்டும்
அதனால் இந்த பக்கம் அமரவேண்டும் 
 
 அன்று சட்ட மன்றத்தில் முதல்வர் கருணாநிதி

           வேல்முருகா நீ வேல்முருகன் இல்லை தூள் முருகன்
 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா
 
            வேல்முருகன் நீங்கள் ஒரு ஒரு நாள் முதல்வர் 





Read more...

Panruti T.Velmurugan participated Show of strength to save the Mullaiperiyar Dam at Merina Beach

திங்கள், 26 டிசம்பர், 2011

CHENNAI: 

              Even as the groundswell of protests continue in Tamil Nadu’s southern districts over the Mullaiperiyar Dam row with Kerala, the protests seemed to take a decidedly ‘anti-national’ tone at a rally held in Chennai on Sunday evening. 

        Organisers and leaders speaking at a public meeting at the end of the march war-ned New Delhi over and over again that if it allowed the Mullaiperiyar to be broken, they would ‘break with the Indian Union’. The meeting, organised by the May 17 Movement, employed rhetoric on this front, for a large part borrowed from the demand for Dravidanadu — a separate Tamil nation — that was given up in 1960s. Speakers at the meeting pointed out that they had gathered for the cause and not under the banners of their respective organisations. 

           Around 5,000 people mar-ched from the Kannagi Statue to the Lighthouse, holding banners condemning the fear psychosis created by the Kerala government and its failure to curb attacks on Ta-milians living in Kerala. They also decried an English language daily for being treacherously lopsided. They called upon all Tamilians to boycott the daily. MDMK leader Vaiko said, “This is a spontaneous crowd, largely of youth. They ...have come out to show how emotive the issue is. We... feel bringing down our dam is preposterous.” Speakers at the meeting included luminaries from the spheres of politics, cinema and literature. “We must unite as Tamilians...,” said director Bharathirajaa. “If a separate country is the only way to secure the rights of our people, so it shall be.” former Panruti MLA Velmurugan, May 17 Movement leader Thirumurugan, poet Thamarai, directors Cheran, Gautaman and Thangar Bachchan,  were among others who took participated. 


Read more...

முல்லைப் பெரியாறு அணையை காக்க மெரினா கடற்கரையில் பேரணி - பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

முல்லைப் பெரியாறு அணையை காக்க மெரினா கடற்கரையில் பேரணி

 

 







             முல்லை பெரியாறு அணையை காக்க ஒன்று கூடுவோம்’ என்ற போராட்டம், மே பதினேழு இயக்கம் சார்பில் மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் நேற்று மாலை (25/12/2011 - ஞாயிற்றுகிழமை ) நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ. தி. வேல்முருகன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, விக்ரமன், சேரன், தங்கர்பச்சான், கவுதமன்,   உள்ளிட்ட 2 ஆயிரத்துக்ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

          தொடக்கத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்க வலியுறுத்தி கலை நிகழ்ச்சி மற்றும் கலங்கரை விளக்கம் வரை பேரணி நடைபெற்றது.


Read more...

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பண்ருட்டி தி.வேல்முருகன் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு








முல்லைப்  பெரியாறு அணை பிரச்சனை குறித்து சென்னையில் சனிக்கிழமை (24/12/2011)  நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்  திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பட்சான், கவுதமன், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற  உறுப்பினர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி ஹாருன் ரஷீத், ஓவியர் வீர சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள கிருஸ்துமஸ் வாழ்த்து செய்தி

சனி, 24 டிசம்பர், 2011





           நாளை டிசம்பர் 25 , 2011 . ஏசுபிரான் பிறந்த நாள் ( கிருஸ்துமஸ் ) விழா கொண்டப்படுவதயொட்டி பண்ருட்டி தி.வேல்முருகன்  வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 

முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள ஏசுபிரான் பிறந்த நாள் (கிருஸ்துமஸ்) வாழ்த்து செய்தி 

            அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள் என்று சொல்லி சமத்துவம் வேண்டும் என்று போதித்த ஏசு பெருமானின் கருத்துக்கள் மூலம் உலகம் விடியலை நோக்கி பயணம் செய்யட்டும் அனைவருக்கும் ஏசுபிரான் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. 

அன்புடன் 

தி.வேல்முருகன்

முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர்
 

Read more...

முல்லை பெரியாறு அணை உரிமைக்கு குரல் கொடுக்க சென்னை மெரினா கடற்கரைக்கு அழைக்கிறார் : பண்ருட்டி.தி.வேல்முருகன்

வியாழன், 22 டிசம்பர், 2011






     மே 17 இயக்கம் சார்பில் 25, டிசம்பர் 2011ல் ஞாயிற்றுகிழமை சென்னை மெரீனா  கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையருகே முல்லைப் பெரியாறு அணை காக்க சாதி மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைவோம் தமிழகத்தின் உரிமையை வென்றெடுப்போம்.
 
இப்படிக்கு 

பண்ருட்டி தி.வேல்முருகன்,
முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்

Read more...

நெல்லிக்குப்பம் பா.ம.க.நிர்வாகிகள் விலகி தி.வேல்முருகனின் இளம்புயல் பாசறையில் இணைந்தனர்

செவ்வாய், 20 டிசம்பர், 2011

நெல்லிக்குப்பம் : 

           நெல்லிக்குப்பத்தில், பா.ம.க., நிர்வாகிகள் அனைவரும், கூண்டோடு விலகி, இளம்புயல் பாசறையில் இணைந்தனர். பா.ம.க.,வில் இருந்து,  முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, இளம்புயல் பாசறை என்ற அமைப்பைத் துவங்கி, அனைத்துப் பகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். வரும் தை மாதம், அரசியல் கட்சியாக துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

          இந்நிலையில், நெல்லிக்குப்பம் பா.ம.க., நகர செயலர் வேலாயுதம், துணை செயலர் கார்த்திக், துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட தேர்தல் பணிக் குழு செயலர் உமாநாத் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், ராமதாஸ் நடவடிக்கையைக் கண்டித்து, அக்கட்சியிலிருந்து விலகி, பண்ருட்டி தி.  வேல்முருகனின் இளம்புயல் பாசறையில் இணைந்தனர். அனைத்து நிர்வாகிகளும், கூண்டோடு பா.ம.க.,வை விட்டு வெளியேறியதால், கட்சி செயல்பாடு முடங்கியுள்ளது.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகனின் இளம்புயல் பாசறையில் தொண்டர்கள் இணையும் விழா - புகைப்படங்கள் பகுதி - 2

திங்கள், 19 டிசம்பர், 2011

Read more...

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை: கேரளாவுக்கு என்.எல்.சி. மின்சாரத்தை கொடுப்பதை நிறுத்த வேண்டும் - பண்ருட்டி தி. வேல்முருகன்

ஞாயிறு, 18 டிசம்பர், 2011


நெய்வேலி: 

           நெய்வேலியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் மின்சாரத்தை உடனே நிறுத்து வேண்டும் என்று  முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பண்ருட்டி  முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருன் கடலூரில் கூறியது,

           முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை மையமாக வைத்து கேரளாவில் வாழும் தமிழர்களையும், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களையும் மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இந்த விவகாரத்தை தமிழக அரசு உணர்வுப் பூர்வமாகவே கையாண்டு வருகிறது. தமிழக மக்களின் ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் முதல்வர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

           இந்த தீர்மானத்தை, மத்திய அரசு வழக்கம் போல் குப்பைக் கூடையில் போடாமல் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கேரளாவிற்கு என்.எல்.சி.யிலிருந்து மின்சாரம் அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில், எனது தலைமையில் பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார். வேல்முருகனின் இந்த எச்சரிக்கையை அடுத்து என்.எல்.சி.யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read more...

தை முதல் நாளில் கடலூர் மஞ்சை மைதானத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் பொது கூட்டம் : பண்ருட்டி தி.வேல்முருகன் அழைக்கிறார்

சனி, 17 டிசம்பர், 2011

 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/VELMURUGAN_1.jpg

பண்ருட்டி:

           வரும் தை முதல் நாள் கடலூர் மஞ்சை மைதானத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயரையும், கொள்கை, லட்சியத்தையும் தெரியப்படுத்துவேன் என பண்ருட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசினார். இளம்புயல் எழுச்சிப் பாசறையின் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் சிவக்குமார் தலைமையில் காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடந்தது.

ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன்  பங்கேற்று  பேசியது: 

             27 ஆண்டுகளாக பாமகவுக்கு உழைத்த என்னை தற்போது நீக்கியதற்கு ராமதாசுக்கு நன்றி. நான் நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்னரே அமைச்சராகி இருப்பேன். என் சொந்தப் பணத்தைக் கல்விக்கும், தொழில் தொடங்கவும் பலருக்கு கொடுத்து கட்சியை வளர்த்துள்ளேன்.என் பெயரைக் கூறி பணம் சம்பாதித்தவர்கள் எல்லாம் எனக்கு எதிராக பேசுகின்றனர்.கட்சிக்காக உழைத்த எங்கள் மீது எவ்வளவு பொய் வழக்குகள், இதில் எங்கள் பக்கம் உண்மை, நீதி, நேர்மை, நியாயம் இருந்ததால் வழக்கில் இருந்து வெளியேறினோம் என தி.வேல்முருகன் பேசினார்.

           கூட்டத்தில் தி.வேல்முருகனின் சகோதரர் தி.திருமால்வளவன், தலித் சக்திவேல், ஜோதிலிங்கம், இரா.சக்திவேல், இரா.அன்பழகன், உக்கரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகனின் இளம்புயல் பாசறையில் தொண்டர்கள் இணையும் விழா - புகைப்படங்கள் பகுதி - 1

Read more...

கடலூர் மாவட்டத்தில் இளம்புயல் பாசறை சார்பில் தி. வேல்முருகனுக்கு பிரம்மாண்ட பேனர்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

கடலூர்:

           பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ வேல்முருகன்  ஜனவரியில் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். 

      இந்நிலையில் முன்னாள் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் ஜனவரியில் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு ஆதரவாக, இளம்புயல் எழுச்சிப்பாசறை சார்பில்  டிஜிட்டல் பேனர்களை அமைத்து வருகின்றனர்.  வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, மந்தாரக்குப்பம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர்.  

Read more...

கூடங்குளம் அணு உலையை கைவிடைக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

வெள்ளி, 9 டிசம்பர், 2011

கூடங்குளம் அணு உலையை கைவிடைக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

Read more...

முல்லைப் பெரியாறு பிரச்சனையை கண்டித்து கடலூரில் மிகப்பெரிய போராட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன்

புதன், 7 டிசம்பர், 2011

கடலூர்:

           முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று   பண்ருட்டி முன்னாள் எம்.எம்.ஏ. வேல்முருகன் கூறினார். 
 
 கடலூரில் திங்கள்கிழமை  பண்ருட்டி முன்னாள் எம்.எம்.ஏ. வேல்முருகன் கூறியது: 

             முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை கேரள அரசு நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சியினரையும் தமிழக முதல்வர் அழைத்துப் பேசி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக கடலூரில் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துப் பேசி, இளைஞர்களைத் திரட்டி கடலூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன். 

            கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது. கேரள மாநிலம் பத்மநாபசுவாமி கோயில் நகைகள் முழுவதும் தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் பல்லவ மன்னர்களால் பாதுகாப்பு கருதி அங்கு வைக்கப்பட்டவை. அதில் நான்கில் மூன்று பங்கு தமிழகத்துக்குச் சொந்தமானது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு மூலம் அந்த நகைகளைப் பெறவேண்டும் என்றார்.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகனின் விழுப்புரம் மாவட்ட ஆதரவாளர்கள் பா.ம.க.வில் இருந்து நீக்கம்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

          பா.ம.க.வில் 2ம் கட்ட தலைவர்களில் ஒருவராக பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தி. வேல்முருகன்   பா.ம.க.வில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாமகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் விலகியவர்களை சந்தித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து வேல்முருகன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
           இந்த நிலையில் வேல்முருகன் ஆதரவாளர்கள் கண்டுபிடித்து கட்சியில் இருந்து நீக்கும் பணியை நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.

           அதன்படி, விழுப்புரம் மாவட்ட முன்னாள் பாமக செயலாளர் ரவி அலெக்ஸ், அவரது தம்பியும் விழுப்புரம் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி செயலாளர் குமரன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நேற்று முன் தினம் நீக்கப்பட்டனர்.

          இதேபோல், கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆலாத்தூர் பாலமுருகனும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் வேல்முருகனுக்கு ஆதரவாளர்கள் இல்லை என்று பாமகவினர் கூறி வந்த நிலையில் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP